ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளி ஊழியரின் வங்கிக்கணக்கில் 6 ஆயிரம் அபேஸ்.

தென்காசி மாவட்டம், தேன்பொத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட நியாய விலை கடை ஒன்று செங்கோட்டை நகரப் பகுதியில் உள்ள நிலையில், இந்த ரேஷன் கடையில் முருகேசன் என்ற ஊழியர் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், இவர் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற நிலையில், அதே நியாய விலைக்கடையில் தற்காலிக ஊழியராக முருகேசன் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றி வந்த அவருக்கு ரூ.1.44 லட்சம் சம்பளத்தொகை கொடுக்காமல் இருந்து வந்த நிலையில், இது தொடர்பாக முருகேசன் கேட்டபோது, முதற்கட்டமாக ரூ.33 ஆயிரம் பணம் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொடுக்கப்பட்ட நிலையில், இரண்டாவதாக ரூ. 36 ஆயிரத்திற்கான காசோலை உங்களது வங்கி கணக்கில் செலுத்த அனுப்பப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்க ஊழியர்கள் தெரிவித்த நிலையில், அவரது வங்கி கணக்கில் ரூ.30 ஆயிரம் பணத்தை மட்டும் வரவு வைத்த ஊழியர்கள் ரூ.6 ஆயிரத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக அவர் கேட்டபோது அதிகாரிகள் எந்த விதமான முறையான பதிலும் அளிக்காமல் அலட்சியம் செய்த நிலையில், முருகேசன் பணியாற்றிய காலத்தில் அவரது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட வைப்புத் தொகையை திரும்பிக் கொடுப்பதற்கும் ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் கேட்பதாகவும், ஒரு குற்றச்சாட்டை முருகேசன் முன் வைத்துள்ளார்.
குறிப்பாக, மாற்றுத்திறனாளியான முருகேசனுக்கு வர வேண்டிய ரூ.7 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளி என்று கூட பார்க்காமல் அவரது வைப்பு தொகையை கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட தேன்பொத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளி ஊழியரின் வங்கிக்கணக்கில் 6 ஆயிரம் அபேஸ்.