தென்காசி,தேனி ,கோவில்பட்டி பகுதிகளில் ஆட்டோக்களை திருடிய தந்தை மகன் கைது.

தென்காசி மாவட்டம் தென்காசி நகர பகுதிகளில் 2 ஆட்டோக்கள் திருடு போனதை தொடர்ந்து ஆட்டோ உரிமையாளர்கள் தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரை தொடர்ந்து தென்காசி போலீசார் ஆட்டோக்களை திருடிய நபர்களை வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். தென்காசி கடையநல்லூர் புளியங்குடி வாசுதேவநல்லூர் சிவகிரி ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 150சிசிடிவி காமிராக்களில் பதிவான ஆட்டோ கடத்தப்பட்ட காட்சிகள் மூலமாக ராஜபாளையம் அய்யனார் கோவில் பகுதியைச் சார்ந்த மாரியப்பன் என்கின்ற மைதீன் மற்றும் அவரது நாலாவது மனைவியின் மூத்த மகன் முகமது ராஜா ஆகியோரை பிப் 1 ஆம் தேதி மாலை கைது செய்த தென்காசி போலீசார் அவர்களிடமிருந்து திருடப்பட்ட 5 ஆட்டோக்களை மீட்டு தென்காசி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆட்டோ இருட்டில் ஈடுபட்ட மாரியப்பன் என்ற மைதீன் ஏழு திருமணங்கள் செய்திருப்பது தெரியவந்தது தொடர்ந்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Tags : தென்காசி,தேனி ,கோவில்பட்டி பகுதிகளில் ஆட்டோக்களை திருடிய தந்தை மகன் கைது.