குற்றாலம் பேரருவியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் 18 ஆம் தேதி இரவு முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக 19ஆம் தேதிக்கு காலை முதல் ஐயப்பன் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குளிக்க திரண்டு வந்தனர் இதன் தொடர்ச்சியாக 3 வது நாளாக 21 ஆம் தேதி இன்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் குற்றாலம் அருவியில் அதிகரித்து காணப்படுகிறது மேலும் பெண்கள் குளிக்கும் பகுதியில் சேதம் அடைந்துள்ளதால் இன்னும் சீரமைக்க பணி முடிவடையாததை தொடர்ந்து அங்கு குளிப்பதற்கு 3 வது நாளாக தொடர்ந்து தடை நீடிக்கிறது இதனால் பெண்கள் ஓரத்தில் நின்று குளித்து ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.
Tags : குற்றாலம் பேரருவியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு.