போதையில் ரகளை காவலர் உயிரிழப்பு.

சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றி வந்தவர் செல்வகுமார்(30). இவர் கேகே நகர் 2வது செக்டார் பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் மின்சாரத் துறையில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வரும் இவரது அண்ணன் பெருமாளும், பெருமாளின் மனைவியான செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி தனலட்சுமி ஆகியோர் வசித்துவருகின்றனர். மதுபோதையில் இருந்த காவலர் செல்வகுமரன் (30) அவரது அண்ணன் பெருமாள் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு, அண்ணனின் அறையிலிருந்த பொருட்களை உடைத்தும், அவரது அண்ணனை மற்றொரு அறையில் பூட்டி வைத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, வீட்டின் பின்புறம் இருந்த கதவு வழியாக கீழே குதித்த போது காம்பவுண்ட் சுவரில் இருந்த கம்பி காவலர் செல்வகுமார் இடுப்பின் பின் பகுதியில் குத்தி சிக்கிக் கொண்டுள்ளார்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பெருமாளை மீட்ட நிலையில் செல்வகுமரன் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : போதையில் ரகளை காவலர் உயிரிழப்பு.