உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்க அமெரிக்கா கூடுதல் நிதி உதவி

by Staff / 07-05-2022 04:10:40pm
உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்க அமெரிக்கா கூடுதல் நிதி உதவி

உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்க கூடுதலாக 150 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிதி மூலம் டாங்குகள் பீரங்கி குண்டுகள் மற்றும் ரேடார்கள்  உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் நாடாளுமன்றக் அளித்த நிதி தீர்ந்து போகும் நிலையில் இருப்பதால் கூடுதலாக முப்பத்தி மூன்று பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்க நாடாளுமன்றத்திடம் கோரப்பட்டு உள்ளதாகவும் அந்த நீதி செப்டம்பர் இறுதி வரையில் போதுமானதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அமெரிக்கா நேரடியாக உக்ரைனுக்கு ஆயுதங்களையும் உபகரணங்களையும் கொடுத்து உதவி வருவதாகவும் கூறி உள்ள சிக்கலான நிலைக்கு மத்தியில் கூட்டணி நாடுகளுடன் இணைந்து புதிய இலக்குகளை முடிவு எடுக்க எனக்கு உதவி வருவதாக அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via