சிறுமி பாலியல் வன்கொடுமை-இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் .. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

: சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி ஒருவரின் பெற்றோரை மிரட்டி வாக்குமூலம் எடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தம் சமூக வலைதளத்தில், பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் புகார் அளித்த பெற்றோர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரி, தமிழக அரசின் காவல்துறையின் மீது அதிருப்தி அடைந்த உயர்நீதிமன்றம் வழக்கை சி.பி. ஐ வசம் ஒப்படைத்தது .தமிழக காவல்துறையையும் உள்துறையையும் கையில் வைத்துள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்..

Tags :