பாமகவின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ம.க. ஸ்டாலினை குண்டு வீசி கொலை செய்ய முயற்சி-நயினார் கண்டனம்.
பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயற்சித்தோரைக் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார். பாமகவின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ம.க. ஸ்டாலினை குண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த விவகாரத்தில், மாநில அரசை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள X பதிவில், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Tags : நயினார் கண்டனம்.



















