பறை முழக்கத்தோடு மார்கழியில் மக்களிசை 2021

by Editor / 25-12-2021 09:17:33am
பறை முழக்கத்தோடு மார்கழியில் மக்களிசை 2021

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் திருவையாறு, மார்கழி உற்சவம் என்ற கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதுபோல், மக்கள் இசைக்கான பிரத்தியேக நிகழ்ச்சியாக ரஞ்சித் இதனை நீலம் பண்பாட்டு மையம் சார்பில் முன்னெடுத்து வருகிறார். இதே போல், 14 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நலிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளைப் பேணிக்காத்திடவும், அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரவும் கனிமொழி கருணாநிதி அவர்களின் முயற்சியில் அன்றைய திமுக அரசு சென்னை சங்கமம் என்ற கலைவிழாவை அரசு விழாவாக நடத்தி வந்தது. இந்த நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் ஆட்சி மாற்றத்தால் சென்னை சங்கமம் கடந்த 10 ஆண்டுகளாக முடங்கிப்போனது.

தற்போது திமுக அரசு அமைத்திருக்கும் நிலையில் கனிமொழி கருணாநிதி தலைமையில் மீண்டும் சென்னை சங்கமத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் இயக்குநர் ரஞ்சித் முயற்சியில் நடக்கும் நீலம் பண்பாட்டு மையத்தின் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சிக்குக் கனிமொழி கருணாநிதி சென்னை - வாணி மஹாலில், இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜி‌.வி.பிரகாஷ், ஆதவன் தீட்சண்யா, கனிமொழி எம்.பி ஆகியோர் பறை முழக்கத்தோடு மார்கழியில் மக்களிசை 2021- ஐ தொடங்கி வைத்தனர் சென்னை சங்கமத்தை மீண்டும் கொண்டுவரும் பணிகளில் கனிமொழி ஆயத்தமாக விட்டார் மீண்டும் சங்கமம் நிகழ்வுகள் நடைபெறுமென  என எதிர்பார்ப்பை உருவாகி யிருக்கிறது.

பறை முழக்கத்தோடு மார்கழியில் மக்களிசை 2021
 

Tags :

Share via