களைகட்டிய குற்றால சீசன் -அலைமோதும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம்

by Editor / 22-05-2022 07:31:07am
களைகட்டிய குற்றால சீசன் -அலைமோதும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம்

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலம்,ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ,சிற்றருவி, உள்ளிட்ட அருவிகள் உள்ளது.

 கடந்த சில தினங்களுக்கு  முன்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வந்ததால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவியும் வறண்ட நிலை காணப்பட்டது.சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 தற்போது பள்ளிகளில் தேர்வு முடிந்து  தினம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தொடர் விடுமுறை காலமென்பதாலும்,இன்று அரசு விடுமுறை என்பதாலும்  சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளார்கள், ஐந்தருவி. மெயின் அருவி. பழைய குற்றாலம். புலியருவி. சிற்றருவி. உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

குறிப்பாக மெயின் அருவி பகுதியில் பெண்கள் கூட்டம்  அதிகளவு உள்ளதால் போலீசார் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பெண்களை வரிசையில் நின்று குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் மேலும் அனைத்து அருவிகளிலும் கட்டுக்கடங்காத சுற்றுலாப்பிபயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதால் காலை முதலே மேற்குதொடர்ச்சிமலைப்பகுதிகளில் சாரலில் தூறலும் இருந்துவருவதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.மொத்தத்தில் தற்போதைய நிலவரப்படி குற்றாலத்தில்  சீசன் களை கட்டியுள்ளது.

களைகட்டிய குற்றால சீசன் -அலைமோதும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
 

Tags : Weedy Courtallam Season - Wave Tourist Crowd

Share via

More stories

Logo