மின்வேலியில் சிக்கி காட்டுயானை பலி விவகாரம்; வனத்துறை ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

by Editor / 15-05-2022 07:10:39pm
மின்வேலியில் சிக்கி காட்டுயானை பலி விவகாரம்; வனத்துறை ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

தருமபுரி அருகே விவசாய தோட்டத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்த விவகாரத்தில் பாலக்கோடு வனச்சரகர் உள்ளிட்ட 3 வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த நல்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரது விவசாய தோட்டத்தில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி, கடந்த 13ஆம் தேதி காட்டுயனை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாகமாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விவசாயி சீனிவாசனை கைது செய்தனர். இந்த நிலையில், யானை உயிரிழந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி பாலக்கோடு வனச்சரகர் உள்ளிட்ட 3 வனத்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.அதன்படி, காட்டுயானையை பாதுகாக்கும் பணியினை சிறப்பாக மேற்கொள்ளாதது, மின்வேலி அமைத்திருப்பதை கவனித்து நடவடிக்கை எடுக்க தவறியது உள்ளிட்ட காரணங்களுக்காக பாலக்கோடு வனச்சரகர் செல்வம், வனவர் கணபதி மற்றும் காப்பாளர் கல்யாண சுந்தரம் ஆகியோரை  சஸ்பெண்ட் செய்து தருமபுரி மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி உத்தரவிட்டு உள்ளார்.

 

Tags : The case of a wild elephant killed in an electric fence; 3 forest department employees suspended

Share via