சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரால் rஇரு தரப்புக்கு இடையில் கடுமையான சண்டை

by Admin / 03-12-2024 09:04:20am
சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரால் rஇரு தரப்புக்கு இடையில் கடுமையான சண்டை

சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரால் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் ரஷ்ய சிறிய ஜெட் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை குண்டு வீச்சை தீவிர படுத்தியது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து சிரியாவில் நடைபெறும் இந்த உள்நாட்டு போரின் காரணமாக இரு தரப்புக்கு இடையில் கடுமையான சண்டைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இதனால் சுமார் 4 லட்சம் மக்கள் தற்காலிக  கூடாரங்கள் மற்றும் குடியிருப்புகளில் வசிக்கும் துருக்கிய எல்லைக்கு அருகில் உள்ள கிளர்ச்சியாளர்களின் மிகப்பெரிய நகரமான இட்லிப்பில்லை இரண்டாம் நாள் தாக்கியதாக குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர். இக்களர்ச்சியாளர்களுக்கு எதிராக நடந்த சண்டையில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும் தகவல். சிரியா ரஷ்யா ராணுவம் இரண்டும் இணைந்து தாக்கியதில் கிளர்ச்சியாளர்கள் குறியிடங்கள் தகர்க்கப்பட்டதாகவும் பொதுமக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். கிளர்ச்சியாளர்களின் கையில் இருந்த பல நகரங்கள் இராணுவ வசம் சென்று விட்டன.

 

Tags :

Share via