தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

by Admin / 16-01-2026 06:30:06pm
தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு 2024 அவர் பிறப்பித்த ராணுவச் சட்ட அறிவிப்பு தொடர்பான வழக்குகளில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2024 டிசம்பரில் ராணுவ சட்டத்தை அமுல்படுத்த முயன்ற போது அவரை கைது செய்ய வந்த அதிகாரிகளை தடுத்தது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை திருத்தியது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. நீதிபதியின் தீர்ப்பின் போது முன்னாள் அதிபர் தனது செயல்களுக்காக வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் அரசியல் அமைப்பை அவர் மதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது அவருக்கு எதிரான எட்டு குற்றவியல் வழக்குகளில் முதலாவது தீர்ப்பு மட்டுமே கிளர்ச்சி தொடர்பான மிக முக்கியமான மற்றொரு வழக்கில் அரசு தரப்பு அவருக்கு மரண தண்டனை விதிக்க கூறியுள்ளது. இதன் தீர்ப்பு பிப்ரவரி 2026 அன்று வழியாக வாய்ப்புள்ளது. முன்னாள் அதிபரின் 2024 டிசம்பரில் திடீரென்று ராணுவ சட்டத்தை பிறப்பித்ததற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via