இன்று மாட்டுப் பொங்கல்- உழைத்துக் கொடுத்த உன்னத உயிர்/

by Staff / 16-01-2026 08:40:46am
இன்று மாட்டுப் பொங்கல்- உழைத்துக் கொடுத்த உன்னத உயிர்/

இன்று மாட்டுப் பொங்கல் மனிதர்களோடு ஆதியில் இருந்து  தொடர்புடைய  அ..றிணை உறவு. மண்ணோடு மல்லுக்கட்டி.. மண்ணின் வளத்தை எல்லாம் மனிதன் சுவைக்க வைப்பதற்கு உழைத்துக் கொடுத்த உன்னத உயிர். தன்னோடு உழைத்தவன் சத்தானவற்றை சாப்பிட வைத்து சக்கைகளை தான் உண்டு.. தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் ஜீவன் . மாடு. பசு என்றால் அது இன்னொரு அன்னை. அது சுரக்கும் பாலில் உண்டு உயிர் வாழும் குழந்தைகளுக்கு இரண்டாம் தாய்.. தாயின் பால்மடி வற்றி போனாலும் ஆ   மடி சுரந்து.. ஆயிரம், ஆயிரம்.. லட்சம் மழலைகளுக்கு உயிர் கொடுக்கும் உன்னத பிறவி.., மாடு. நாகரீகம் வளர்ந்து ...மனிதன் இயந்திரங்களில் இயங்கிக் கொண்டிருந்தாலும். .. ஆரம்பச் செல்வம் மாடு அல்லவோ... சங்க இலக்கியத்தில் மாட்டிற்கு செல்வம் என்கிற பெயரும் உண்டு. ஆரம்ப மனிதனுக்கு பொருளாதாரமே மாடு தான். ஈட்டி கொடுத்தது, பொருளாதாரமாகவும்.,, நின்று ,அவனை கை தூக்கி விட்டது.. அப்படிப்பட்ட உயிருக்கும்.. சூரியனுக்கும் இடையிலான மனித உறவுக்கு மகிழ்ச்சியை தந்து... மகத்துவமாய் வாழும் மாட்டிற்கு நன்றி சொல்லி... மண் தந்த காய்களையும் பழங்களையும் கரும்பையும் தித்திக்கும் சர்க்கரை பொங்கலையும் சமைத்து அது உண்ண தந்து  நன்றி சொல்லும் நயத்தக்க நாகரீகபொழுது. அதை வழிபடக்கூடிய காலம்.   காலம்,காலமாக... எங்களோடு நீ பயணிக்க வேண்டும் என்று சொல்கின்ற வேளை  இது..

 

 

Tags :

Share via