ஒன்றாக உயிரிழந்த இரட்டை பெண் குழந்தைகள்.. இறப்பில் சந்தேகம்

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில், 11 மாதமான இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை சரியில்லை என கூறி, குழந்தைகளுக்கு நாட்டு மருந்து கொடுத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை உயிரிழந்தது. அதேபோல், மற்றொரு குழந்தை திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தது. பெண் குழந்தைகள் என்பதால், இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :