"நான் முதல்வன் திட்டம் படுதோல்வி" - அன்புமணி விமர்சனம்

தமிழக அரசின், ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “திறன் பயிற்சிக்காக சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்து வருகிறது. அதோடு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2023ஆம் ஆண்டு 1,35,137 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் சேர்ந்திருந்தனர். நடப்பாண்டில் வெறும் 11,865 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 2023-ல் சேர்ந்த 68,600 பேருக்கு வேலை கிடைக்கவில்லை” என குற்றம்சாட்டியுள்ளார்.
Tags :