அசாமில் லேசான நிலநடுக்கம்

அசாமில் வியாழக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கவுகாத்தியில் மையம் கொண்டிருந்தது. திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :