சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

by Staff / 09-12-2023 11:50:31am
சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 23ஆம் தேதி முதல் கடந்த 6 வாரங்களில் இதுவரை 13,234 முகாம்கள் நடைபெற்று, அதில் 6,50,585 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். தற்போது பருவமழைக்காலமாக உள்ள காரணத்தினால் சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் 3,000 இடங்களிலும், அதில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

 

Tags :

Share via

More stories