காமராஜர் யார் மோடி யாருன்னு மக்களுக்கு தெரியும் சீனிவாசன்

by Staff / 14-01-2024 02:48:27pm
காமராஜர் யார் மோடி யாருன்னு மக்களுக்கு தெரியும் சீனிவாசன்

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குட்டியபட்டியில் ரூபாய் 38 லட்சம் செலவில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக பொருளாளரும், எம்.எல்.ஏவுமான திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர், காமராஜருடன் மோடியை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திண்டுக்கல் சீனிவாசன், "காமராஜர் யார் மற்றவர்கள் யார் காமராஜர் எப்படிப்பட்டவர், மற்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். இது குறித்து நான் கூற வேண்டிய அவசியம் இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo