பல்ஹார் மாவட்டத்திலும் பறவைக் காய்ச்சல் மகாராஷ்டிரா மக்கள் பீதி

by Admin / 19-02-2022 04:57:42pm
 பல்ஹார் மாவட்டத்திலும் பறவைக் காய்ச்சல்  மகாராஷ்டிரா மக்கள் பீதி


மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் வெஹ்லோலி என்கிற கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 கோழிகள் திடீரென இறந்தன. 

இதையடுத்து, இறந்த கோழிகளின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. 

அதன் முடிவில் கோழிகள் எச்5என்1 என்கிற பறவைக் காய்ச்சலால் இறந்தது உறுதியானது.

இதன் எதிரொலியால் ஷாஹாபூர் கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றியுள்ள அனைத்து பிராய்லர் கோழிகளையும் அழிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, 25 ஆயிரம் பிராய்லர் கோழிகள் கொல்லப்பட்டன.
 
இந்நிலையில், தானே மாவட்டத்தை தொடர்ந்து வசை- விரார் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையிலும் கோழிகள் திடீரென இறந்தன. இறந்த கோழிகளின் மாதரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பிய நிலையில், கோழிகள் பறவைக் காய்ச்சலால் தான் இறந்தது என்பது உறுதியானது. இதனால் கோழிகளை அழிக்க அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

Tags :

Share via