குட்கா, புகையிலை விற்ற 80 கடைகளுக்கு சீல்
சேலம் மாவட்டம், மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களைபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கைதாகும்
நபர்களின் கடைகளைபூட்டி சீல் வைக்கும் பணியை போலீசாருடன் இணைந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.மாநகர போலீசார் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 350க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.இது குறித்து உணவுபாதுகாப்பு அதிகாரிகள்கூறியதாவது: வெளி மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா,புகையிலை பொருட்களை கடத்தி வந்து பெட்டிகடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 2 மாதத்தில் சேலம் மாவட்டத்தில் ஜலகண்டாபுரம், நங்கவள்ளி,தாரமங்கலம், ஓமலூர், தொளசம்பட்டி, ஆட்டையாம்பட்டி மற்றும் சேலம் மாநகர பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி விற்ற 80 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 40 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைபொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட். டால் அந்த கடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என கூறினர்.
Tags :