வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகள் எண்ணிக்கை16 ஆக உயர்த்த தெற்கு இரயில்வே பரிந்துரை.

by Editor / 12-11-2024 10:53:28am
வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகள் எண்ணிக்கை16 ஆக உயர்த்த தெற்கு இரயில்வே பரிந்துரை.

நெல்லை டூ சென்னை எழும்பூர் சேவை வந்தே பாரத் ரெயிலின்  கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டு மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்று வருகிறது. கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் விடுமுறை நாட்களை கொண்டாட எப்படியாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து விட வேண்டும் என்று ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இந்த ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய ரயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்கிறது. டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரை நெல்லை டூ சென்னைக்கு ஏசி சேர் கார் ரூ.1,665 என்றும், எக்ஸிக்யூடிவ் சேர் கார் ரூ.3,055 என்றும் வசூலிக்கப்படுகிறது. அதுவே சென்னை எழும்பூர் டூ சென்னைக்கு ஏசி சேர் கார் ரூ.1,610 என்றும், ரூ.3,005 என்றும் வசூலிக்கப்பட்டு வருகிறது.நாளுக்குநாள் இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் வரவேற்ப்பைத்தொடர்ந்து திருநெல்வேலி - சென்னை எழும்பூர் - திருநெல்வேலி (20665/20666) வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகள் எண்ணிக்கையை 8-ல் இருந்து 16 ஆக உயர்த்த தெற்கு இரயில்வே பரிந்துரை செய்து உள்ளது.

 

Tags : வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகள் எண்ணிக்கை16 ஆக உயர்த்த தெற்கு இரயில்வே பரிந்துரை.

Share via