வாயு கசிந்து விபத்து

by Admin / 12-12-2021 12:18:02am
வாயு கசிந்து விபத்து

ஈரோடு ,அருகே உள்ள சித்தோடு நல்லாக்கவுண்டனூர் பைபாஸில் தனியாருக்குச்சொந்தமான குளோரின் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.இங்கு வழக்கம் போலவே தொழிற்சாலை உரிமையாளர்  தாமோதரன் உள்பட 14 ஊழியர்கள் ப்ளிச்சிங்  பவுடர் தயாயிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது நச்சு தன்மை கொண்ட வாயு கசிவு ஏற்பட்டது.வெளியேறிய விஷ வாயு தாக்கியதில் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.இதையடுத்து சித்தோடு,பவானி ஆகிய பகுதியிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு ,நச்சுத்தன்மையில் பாதிப்படையாத பாதுகாப்பான உடை அணிந்து பலரை மீட்டனர்.தொழிற்சாலை உர்மையாளர் தாமோதரன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.13பேர் ஈரோடு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via
Logo