முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் போதை ஆசாமி கைது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி போன் இணைப்பை மரம்நபர் ஒருவர் துண்டித்து விட்டார்.இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதலமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியதில் வதந்தி என்பது தெரியவந்தது.இதனையடுத்து வெடிகுண்டு விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை காவல்துறை விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி என்ற பகுதியைசேர்ந்த அந்தோணி ராஜ் தான் என்றும் அவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அந்தோணி ராஜை கைது செய்து காவல்நிலையம் கொண்டு சென்றனர்.விசாரணையில் அவர் குடிபோதையில் மிரட்டல் விடுத்ததும் தெரிந்தது.சென்னை போலீசார் இன்று அதிகாலை விரைந்துவந்து ஆரோக்கியராஜை சென்னைக்கு அழைத்து சென்றனர்.
Tags : முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் போதை ஆசாமி கைது