இன்று யு.பி.எஸ்.சி எனப்படும் இந்திய குடிமை ஆட்சி பணி தேர்வு முடிவுகள் வெளியானது
இன்று யு.பி.எஸ்.சி எனப்படும் இந்திய குடிமை ஆட்சி பணி தேர்வு முடிவுகள் வெளியானது கடந்த 2022ல் தேர்வு நடத்தப்பட்டது. முடிவு மே 23 இன்று வெளியிடப்பட்டது.முதல் மூன்று இடங்களை மகளிர் பெற்றுள்ளனர். ஈசிகா கிஷோர் முதல் இடத்தையும் கரிமா லோகியா மற்றும் உமா பாரதி ஆகியோர் முறையே இரண்டாவது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இந்தியாவின் நிர்வாக ஆளுமை பதவியான யு. பி. எஸ்.சி தேர்வு இந்திய நிர்வாகப் பணி ஐ.ஏ.எஸ் இந்திய வெளியுறவு பணி ஐ. எஃப். எஸ் ,இந்திய காவல் பணி ஐ.பி.எஸ் மற்றும் பிற மத்திய பணிகளுக்கான அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. முதல் நிலை , முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளில் ஆண்டுதோறும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. மூன்று நிலைகளில் தேர்வு செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு இந்த ஆண்டு 933 விண்ணப்பதாரர்கள் பணி நியமனத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மொத்த விண்ணப்பதாரர்களில் 345 பேர் பொது பிரிவையும் 95 பேர் பெண்களும் 263 பேர் ஓ.பி.சி என்னும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்தவர்கள் 154 பேர்பட்டியலினத்தவா் 72 பேர் பழங்குடி பட்டியலினத்தவா் என ஆணையம் தெரிவித்துள்ளது. 101 வேட்பாளர்கள் உறுதிபடுத்தப்படாத நிலையில்.தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags :