காதலியோடு வாக்குவாதம் 70 இலட்சம் பென்ஸ் கார் தீக்கிரை.

by Editor / 27-01-2023 09:22:18am
காதலியோடு வாக்குவாதம் 70 இலட்சம் பென்ஸ் கார் தீக்கிரை.

காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் குளைக்கரை அருகே பென்ஸ் காரில் வந்த
இளம் காதல் ஜோடிகள் பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென காதலன், காதலிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபத்தில் காதலன் 70 லட்சம் மதிப்பிலான தனது சொந்த பென்ஸ் காரை பெட்ரோல் ஊத்தி எதிர்த்துள்ளார்.

குளக்கரை அருகே கார் ஒன்று எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புப் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீ பற்றி எரிந்த காரை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கவின் (வயது 28) என்பவரது கார் என்பது தெரியவந்தது.  கவின் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் கடந்த ஆண்டு மருத்துவம் பயின்று முடித்துள்ளார். இந்நிலையில் அதே கல்லூரியை சேர்ந்த உடன் படிக்கும் மாணவி காவ்யா என்பவருடம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் காதலியுடன் பேசிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆத்திரம் அடைந்த கவின் தனக்கு சொந்தமான (பென்ஸ்) 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பென்ஸ் காரை பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார்.மேலும் சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via