பொதுமக்கள் பட்ஜெட் தொடர்பான தகவல்களை செல்போன் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

பிப்ரவரி 1ஆம் தேதி, 2023-24ம் நிதியாண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அதனை முன்னிட்டு நாடாளுமன்ற நார்த் ப்ளாக் பகுதியில், அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அல்வா தயாரித்து, நிதியமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கினார். இதில் மத்திய இணை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மத்திய நிதி ஆயோக் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து நிதியமச்சகம் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தயாரித்துள்ளது. இந்த ஆண்டு, பட்ஜெட் தொடர்பான தகவல்களை பொதுமக்கள், Union Budget Mobile App என்ற செல்போன் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :