தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு
பள்ளிகளில், மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிப்புரிய அனுமதி.
திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
ஐடிஐ போன்ற தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு பயிற்சி நிலையங்கள் 50 சதவீத மாணவர்களுடன் செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து தடை விதிக்கப்படுகிறது.
இவற்றிக்குக்கெல்லாம் தடை நீட்டிப்பு?
தியேட்டர்கள் திறக்க தடை தொடர்கிறது
நீச்சல் குளங்கள் திறக்க தடை தொடர்கிறது
அனைத்து மதுக்கூடங்கள் திறக்க தடை தொடர்கிறது
அரசியல் சமூக கூட்டங்களுக்குத்தடை தொடர்கிறது
உயிரியல் பூங்காக்களுக்குத் தொடர்ந்து தடை நீட்டிப்பு.
பள்ளிகள் திறக்க தடை தொடர்கிறது
கல்லூரிகள் திறக்க தடை தொடர்கிறது.
Tags :