நாவலாசிரியர் டி.பி.ஜீவன் காலமானார்

by Staff / 03-11-2022 12:27:28pm
 நாவலாசிரியர் டி.பி.ஜீவன் காலமானார்

திரைக்கதை எழுத்தாளர், கவிஞர் மற்றும் நாவலாசிரியர் டி.பி.ஜீவன் காலமானார். இவருக்கு வயது 63. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கவிதைகள், பயணக்கட்டுரைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள டி.பி. ராஜீவன் திரைக்கதை எழுத்தாளரும் கூட. அவர் எழுதிய 'பலேரிமாணிக்கம் ஒரு பத்திரகோலப் பதாகத்திண்டே கதை' நாவல் அதே பெயரில் திரைப்படமாகவும், "கே.டி.என். கொட்டூர்- எழுத்தும் ஜீவிதவும்" நாவல் "நியம்" என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி(யுடிஎப்) அரசாங்கத்தின் போது கலாச்சார அமைச்சரின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

 

Tags :

Share via

More stories

Logo