இரட்டை வேடம் போடும் தி.மு.க. அரசு - ஓபிஎஸ் கண்டனம்

தகுதித் தேர்வு முடித்த ஆசிரியர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்வதில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வின்றி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வலியுறுத்தி 2020ஆம் ஆண்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு ஆதரவு அளித்தவர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தவர் அவர். ஆட்சியில் இருக்கும் போது ஒருவிதமாகவும், ஆட்சியில் இல்லாத போது மற்றொருவிதமாகவும் திமுக அரசு நடக்கிறது என கூறியுள்ளார்.
Tags :