ஸ்கூட்டர் டிக்கியில் இருந்த ரூ.9 லட்சம் திருட்டு.. காட்டிக்கொடுத்த சிசிடிவி

by Staff / 28-02-2025 02:50:53pm
ஸ்கூட்டர் டிக்கியில் இருந்த ரூ.9 லட்சம் திருட்டு.. காட்டிக்கொடுத்த சிசிடிவி

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், ஸ்டாம்ப் விற்பனையாளர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் ரூ. 9 லட்சம் பணத்தை வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றார். இதனை நோட்டமிட்ட திருடன், அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர், ஸ்கூட்டர் டிக்கியில் இருந்த பணத்தை நூதனமாக திருடிக்கொண்டு அங்கிருந்து ஓட்டம்பிடித்தார். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தன. அதனை வைத்து, போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

 

Tags :

Share via