ஓ.பி.எஸ்.பிறந்தநாள் டி.டி.வி.வாழ்த்து.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழக முன்னாள் முதல்வர் அன்புச் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பூரண உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Tags : ஓ.பி.எஸ்.பிறந்தநாள் டி.டி.வி.வாழ்த்து.