தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கினாா் முதலமைச்சர் மு..க..ஸ்டாலின்.

by Editor / 14-01-2024 10:20:40am
தமிழ்நாடு  அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கினாா் முதலமைச்சர் மு..க..ஸ்டாலின்.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் நிகழ்ந்தது.. விருது பெற்ற விருதாளர்களுக்கு தமிழக  முதலமைச்சர் மு க ஸ்டாலின் விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் இந்து சமயநலத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

◾️ திருவள்ளுவர் விருது - தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி [2024]

◾️ பேரறிஞர் அண்ணா விருது - பத்தமடை பரமசிவம்

◾️ பெருந்தலைவர் காமராசர் விருது - உ.பலராமன்

◾️ மகாகவி பாரதியார் விருது - கவிஞர் பழநிபாரதி

◾️ பாவேந்தர் பாரதிதாசன் விருது - எழுச்சிக் கவிஞர் முத்தரசு

◾️ தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - ஜெயசீல ஸ்டீபன்

◾️ முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - முனைவர் இரா.கருணாநிதி

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் 2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்பட்டது.

 

Tags : தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Share via