விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார்-செல்வப் பெருந்தகை.
திருவண்ணாமலை மண் சரிவில் இறந்த ஏழு பேரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்:
பேரிடர் வரும்போது துல்லியமாக வானிலை அறிக்கை சொல்லாததற்கு காரணம் என்ன என்றும், மத்திய அரசு தான் இதை மாநில அரசுகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், பேரிடர் காலங்களில் மாநில அரசுக்கு நிதியை தராமல் மத்திய அரசு வஞ்சித்து வருவதாகவும், அவர்களுக்கு தேவைப்படும் மாநிலங்களுக்கு மட்டும் வழங்கி வருவதாகவும், அவர்களுக்கு தேவை பீகார், ஆந்திரா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டு செய்வதாகவும், தமிழகத்தை மாற்றான் தாய் மனப்போக்கில் கையாள்வதாக செல்வப் பெருந்தகை குற்றம் குற்றம் சாட்டினார்.
சுனாமி வந்த போது தமிழகத்துக்கு தேவையான நிதியை அப்போதைய காங்கிரஸ் அரசு வழங்கியது என்றும், எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு தெரியவில்லை என்று செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் முடியாட்சி நடக்கவில்லை குடியாட்சி தான் நடைபெறுகிறது என்றும், 1971ம் ஆண்டு மன்னராட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்துவிட்டது.
கூட்டணி அரசியல் அதிகார பகிர்வு இவை அனைத்துமே அனைத்திந்திய தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் விஜய் அல்ல. விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்துள்ளார். மேடையில் பேசி முடிவு எடுக்கும் விஷயம் இது அல்ல என்றும்,
எதிர்கால சந்ததியினருக்கு குடிக்க பாதுகாப்பான குடிநீரை விட்டு செல்வது தான் நமது கடமை. நீர்வளத் துறைக்கு அதிக அளவு நிதியை ஒதுக்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்தார்.
Tags : விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார்-செல்வப் பெருந்தகை