திருப்பதியில் தரிசனம் செய்த நயன்தாரா

by Staff / 05-09-2023 10:49:20am
திருப்பதியில் தரிசனம் செய்த நயன்தாரா

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பிரபல நடிகர் ஷாருக்கான், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இந்த படம் வெற்றியடைய நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று அதிகாலை திருப்பதி கோயிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வேஷ்டி சட்டையில் ஷாருக்கானும், வெள்ளை சல்வாரில் நயன்தாராவும் கோவிலுக்கு சென்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via