ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு

by Staff / 21-01-2023 12:43:18pm
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் 2வது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா கடந்த 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனை தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அவரது குடும்பத்தில் இருந்து யாரேனும் ஒருவருக்கு தொகுதி ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories