, மேகதாது அணை விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் சவுத்ரி புரிதல் இல்லாமல் பேசி உள்ளார்- நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த்

by Admin / 29-07-2026 01:28:58am
, மேகதாது அணை விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் சவுத்ரி புரிதல் இல்லாமல் பேசி உள்ளார்- நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த்

சென்னை சோழிங்கநல்லூரில் பக்கிங் காம் கால்வாய் தூர் வாரும் பணியை தொடங்கி வைத்த நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் செய்தியாளர்கள் மேகதாது அணை  விவகாரம் பற்றி கேட்டபொழுது, மேகதாது அணை விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் சவுத்ரி புரிதல் இல்லாமல் பேசி உள்ளார் என்றும் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களின் ஒப்புதல் கர்நாடகாவுக்கு தேவை இல்லை என்ற நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பேசியது தவறான புரிதலாகும் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சட்ட வல்லுநர்களுடன் தீவிரமாக ஆலோசித்து உரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கர்நாடக பிற மாநிலங்களின் அனுமதியை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார் இதற்கு தமிழக முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo