இந்து சமய அறநிலைத்துறையை நிர்வாக வசதிக்காக தமிழ்நாடு அரசு இரண்டு புதிய மண்டலங்களாக பிரித்து அரசாணை
இந்து சமய அறநிலைத்துறையை நிர்வாக வசதிக்காக தமிழ்நாடு அரசு இரண்டு புதிய மண்டலங்களாக பிரித்து அரசாணை வெளியிட்டுள்ளது. வட மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி வடக்கு மண்டலமாகவும் இதற்கு சென்னை தலைமை இடமாகவும் தெற்கு மாவட்டங்களை அடக்கியவை தெற்கு மண்டலமாகவும் அதற்கு திருச்சி தலைமை இடமாகவும் செயல்படும் என்றும் இரண்டு மண்டலங்களுக்கும் கூடுதல் ஆணையர் வீதம் இரண்டு புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த மண்டலங்களின் கீழ் மண்டலங்களுக்கு உட்பட்ட கோவில் சொத்துக்கள் ஆவணங்கள் முழுமையாக ஆய்வு செய்து கண்காணிக்கும் அதிகாரங்களை பெற்ற அமைப்பினராக செயல்படுவர். சென்னை மண்டலத்தில் கீழ் காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் விழுப்புரம் அடங்கும் திருச்சி மண்டலம் திருச்சி திருப்பூர் நாகை நெல்லை மாவட்டங்கள் செயல்படும்.
Tags :



















