மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33 -வது பட்டமளிப்பு விழா- மூன்றாவதாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33 -வது பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் வென்ற113 பேருக்கு மட்டுமே தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பட்டம் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முனைவர் பட்டம் பெற்ற பலர் தாங்கள் ஆறு ஆண்டுகளாக உழைத்து பெற்ற பட்டம் என்றும் சென்னை போன்ற நகரங்களில் இருந்து பட்டம் பெரும் பொருட்டே விடுமுறை எடுத்து வந்திருப்பதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 837 பேர் முனைவர் பட்டம் பெற்ற நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உடையவர்களுக்கு தான் கொடுப்போம் என்பது பெரும் பிரச்சனையாக பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் ஆளுநருடன் ஆலோசனை நடத்திய பின்பு 837 பேருக்கும் முனைவர் பட்டத்தை ஆளுநரே வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், பட்டமளிப்பு விழா மேடையில் வந்தே மாதரம் பாடல் முதலில் இசைக்கப்பட்டு இரண்டாவதாக பேசிய கீதமும் மூன்றாவதாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழ் தாய் வாழ்த்து பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்திலே தமிழ் தாய் வாழ்த்திற்கு மூன்றாவது இடமா என்கிற குற்றச்சாட்டு பல்வேறு அரசியல் கட்சிகளால்.. அமைப்புக்களால்.. மாணவர்களால் முன்வைக்கப்பட்டது. தமிழ் தாய் வாழ்த்து பாடல் முதலில் இடம் பெறாது என்று ஆளுநர் மாளிகை அறிவித்ததை அடுத்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார். அத்துடன் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிகழ்வை புறக்கணித்தனர்.
Tags :


















