உளுந்தூர்பேட்டையில் காலணி தொழிற் சாலையை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

by Admin / 26-12-2025 03:52:22pm
 உளுந்தூர்பேட்டையில் காலணி தொழிற் சாலையை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக உளுந்தூர்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு பயணம் மேற் கொண்டுள்ளார். முதலாவதாக , கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் காலணி தொழிற் சாலையை பார்வையிட்டார்.இன்று உளுந்தூர்பேட்டையில் சிப்காட்டில் உள்ளகாலனி தொழிற்சாலையை பார்வையிட்டார்.  232 கோடி முதலீடு செய்ய 20,000 பேர் புதிதாக வேலை பெறக்கூடிய உள்ளூர் வேலைவாய்ப்புக்கு ஊக்கம் கொடுக்கக்கூடிய இந்த நிறுவனம் அரசோடு 2024 உலகளாவிய முதலீட்டாளர் சந்திப்பின் பொழுது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிகழ்வின் பொழுது ஐந்து பேருக்கு வேலை வாய்ப்பு கடிதங்களையும் வழங்கினார். தொடா்ச்சியாக,வீரசோழபுரத்தில் 39.81 ஏக்கர் பரப்புளவில் 139.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்

 

 

Tags :

Share via