பயங்கர விபத்து.. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி

ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லி - மும்பை விரைவு சாலையில் சென்ற லாரி ஒன்று திடீரென யு-டர்ன் எடுத்ததால் பின்னால் வந்த கார் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடந்ததாக தெரிகிறது. தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :