சதுரகிரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றத்துடன் காத்திருப்பு

by Staff / 05-08-2024 04:43:00pm
சதுரகிரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றத்துடன் காத்திருப்பு

சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவுக்கு சென்ற பத்தர்கள் கீழே இறங்கி வருவதால் பக்தர்கள் கோயிலுக்கு அனுமதி மறுப்பு.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆடி அமாவாசை திருவிழா நேற்று நடைபெற்ற நிலையில் இதனையொட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதி இன்று 5ஆம் தேதி வரை மொத்தம் ஐந்து நாட்களுக்கு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி என்பது கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் 70 ஆயிரத்திற்கும் பக்தர்கள் அதிகாலை முதலிலே கோவில் அடிவாரப் பகுதியில் குவிந்து மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.மேலும் காலை 6: 00 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டு நேற்று மதியம் 12: 00 மணிக்கு மேல் பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.இந்த நிலையில் நேற்று தாணிப்பாறை அடிவாரப் பகுதி வழியாகவும், வாழைத்தோப்பு வழியாகவும் பக்தர்கள் சென்ற நிலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு சிலர் இறங்கிய நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக ஏராளமான பக்தர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

 

Tags :

Share via