கழுத்தை அறுத்து கொலை...

by Admin / 02-09-2021 03:47:15pm
கழுத்தை அறுத்து கொலை...

 

நெய்வேலியில் வாலிபரை கழுத்தை அறுத்து கொலை ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை.
 
கடலூர் மாவட்டம் நெய்வேலி ஓம்சக்தி நகரைச் சேர்ந்த ராஜன் மகன் அருண்(எ) அருண்குமார் இவர் அதே பகுதியில் ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.  இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் ரம்யா தூக்கு மாட்டி இறந்தார். இந்நிலையில் ரம்யா இறப்பிற்கு அருண்குமார் காரணம் என்று தெரியவந்ததன்பேரில் அருண் குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைதண்டனை கடலூர் மற்றும் திருச்சி சிறையில்  கடந்த ஐந்து மாதம் முன்பு கடலூர் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். வெளியில் வந்த அருண்குமார் சிவகங்கை மாவட்டத்தில் வாட்டர் சப்ளை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு வாரம் முன்பு தனது தாத்தாவின் துக்க காரியத்திற்காக உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகருக்கு வந்துள்ளார்.

 ஓம்சக்தி நகரில் உள்ள தனது சித்தியைப் பார்த்துவிட்டு, மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் வரை சென்று வருகிறேன் என்று 11 மணி அளவில் சொல்லி விட்டு சென்ற அருண்குமார் வீடு திரும்பவில்லை.

 இந்நிலையில் அருண்குமார் மந்தாரக்குப்பம் ரயில்வே கேட் அருகில் ஓம்சக்தி நகரில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.  மந்தாரக்குப்பம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்குமார் பிரேதத்தை  பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அருண்குமார் சித்தி பவளக்கொடி மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். அருண்குமார் மீது 2 திருட்டு வழக்கு மற்றும் அவரது மனைவி இறந்ததற்காக 7 வருடம் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். இவரை அவரது கூட்டாளிகள் யாராவது கொலை செய்திருப்பார்களா இல்லை வேறு ஏதாவது முன்விரோதம் காரணத்தால் அவரை கொலை செய்து இருப்பார்களா என்று போலீசார் பல கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo