பயங்கரமாய் பரவும் பல வகை காய்ச்சல்கள்

கேரளாவில் பல்வேறு வகையான காய்ச்சலுக்கு ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் உயிரிழந்தனர், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 12,200 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 4 பேருக்கு எலிக்காய்ச்சலும், 173 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 4 பேருக்கு காலராவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 44 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
Tags :