புதுடில்லியில் இன்று ஐந்தாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி

by Admin / 28-12-2025 03:52:35pm
புதுடில்லியில் இன்று ஐந்தாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி

புதுடில்லியில் இன்று ஐந்தாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விக்சித் பாரதியத்திற்கான மனித மூலதனம் என்கிற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. டிசம்பர் 26 முதல் டிசம்பர் 28 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆரம்ப கால குழந்தை ,பருவ கல்வி, பள்ளி படிப்பு, திறன் மேம்பாடு, உயர்கல்வி,, விளையாட்டு மற்றும் இதர செயல்பாடுகள் குறித்தான துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் நோக்கம் கொண்டு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. மாநாட்டின் சிறப்பு அமர்வுகளாக ஆட்சி முறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, தற்சார்பு இந்தியா மற்றும் மாநிலங்களின் விதிமுறைகளை எளிமையாக்குதல் போன்ற தலைப்புகளில் சிறப்பு அமர்வுகள் நடத்தப்பட்டன. பிரதமர் மோடி தம் உரையில் மத்திய -மாநில அரசுகளுக்கு இடையான கூட்டுறவு கூட்டாட்சி வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார் மேலும் நாட்டின் மக்கள் தொகையை வெறும் எண்ணிக்கையாக பார்க்காமல் அவர்களை ஒரு மனித மூலதனமாக மாற்றுவதற்கான உத்திகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கினார். இம்மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மத்திய அமைச்சர்களின் உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டனர். மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டுறவை வலுப்படுத்துவதும் வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்குவதும் இம்மாநாட்டின் நோக்கமாகும்.

 

 

Tags :

Share via

More stories