கொளுத்தும் வெயிலில் வேலை - விதிக்கப்பட்ட தடை இன்றுடன் முடிவு

by Staff / 16-09-2022 01:59:24pm
கொளுத்தும் வெயிலில் வேலை - விதிக்கப்பட்ட தடை இன்றுடன் முடிவு

சவுதியில் கொளுத்தும் வெயிலில் வேலை பார்க்க விதிக்கப்பட்ட தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் காரணமாக பகல் 12 மணி முதல் 3 மணிவரை வெளியிடங்களில் நடைபெறும் வேலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் விலக்கிக்கொள்ளப்படுகிறது.

கட்டுமானம், மீன்பிடி தொழில், துப்புரவு பணி, சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு கொளுத்தும் வெயில் நேரத்தில் தடை விதிக்கப்பட்டது. அந்த தடையானது இன்று முதல் நீக்கப்படுவதாக அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த ஜுன் மாதம் 15ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொழிலாளிகளின் உடல்நிலையை கருத்தில்கொண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை மீறிய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்தது.


 

 

Tags :

Share via