சமூகநீதியை படுகொலை செய்த ஸ்டாலின் - அன்புமணி காட்டம்

by Editor / 07-07-2025 12:53:57pm
சமூகநீதியை படுகொலை செய்த ஸ்டாலின் - அன்புமணி காட்டம்

சமூகநீதியை படுகொலை செய்துவிட்டு விடுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டி வருவதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் 2,739 விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். சமூகநீதி என்ற பெயரை திமுக அரசு பயன்படுத்துவதை விட பெருங்கொடுமை இருக்க முடியாது. ஒருவரை கொடுமைப்படுத்தி படுகொலை செய்து விட்டு, கல்லறையில் பெயரை பொறிப்பது எப்படியோ, அப்படித்தான் ஸ்டாலினின் செயல்பாடுகள் உள்ளன என சாடியுள்ளார்.

 

Tags :

Share via