அமெரிக்காவின் டெக்சாஸில் காட்டாற்று வெள்ளம் 59பேர் பலி.

அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. மீட்புக் குழுக்கள் இன்னும் காணாமல் போன பலரைத் தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கெர் கவுண்டியில் உள்ள ஒரு கோடைக்கால முகாமில் இருந்த 27 சிறுமிகளை இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. மரங்கள் சாய்ந்து, வெள்ளத்தில் வாகனங்கள் பல அடித்துச் செல்லப்பட்டன. ஹெலிகாப்டர்கள், படகுகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றுடன் அவசரகால குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Tags : 59 people killed in wildfires in Texas, USA.