மாற்றுச்சாதியை சேர்ந்தவரை காதலித்த மகள் தற்கொலை செய்துகொண்ட அதிகாரி-ஆசிரியை.

by Staff / 07-07-2025 10:15:44am
மாற்றுச்சாதியை சேர்ந்தவரை காதலித்த மகள் தற்கொலை செய்துகொண்ட அதிகாரி-ஆசிரியை.

திருச்சி வட்டாரப் போக்குவரத்து துறை பறக்கும்படையில் (ENFORCEMENT -ல் பணியாற்றி வந்த மோட்டார் வாகன அலுவலர் சுப்பிரமணியம்  (55)  இவரது மனைவி பிரமிளா (51) தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.நாமக்கல்லை சேர்ந்த இந்தத்தம்பதியினருக்கு ஒருமகன்,ஒரு மகள் உள்ளனர்.இவர்கள் இருவரும் நேற்று காலை சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்த போலீசாரின் விசாரணையில் தம்பதியின் மகள் சம்யுக்தா என்பவர் வேறு சாதி இளைஞரை காதலித்தார். இதை பெற்றோர் எதிர்த்தும் காதலில் உறுதியாக இருந்தார். இந்த விரக்தியில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.மேலும் முதல்நாளே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முயற்சித்ததாகவும் மகன் காப்பாற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : An officer-teacher whose daughter committed suicide after falling in love with a transgender man.

Share via