இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்று பரவலாக இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை.

by Staff / 07-07-2025 10:09:06am
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்று பரவலாக இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்று (ஜூலை 07) பரவலாக இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பஞ்சாப், ஹரியானாவில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சத்தீஸ்கர், கிழக்கு மத்தியப் பிரதேசம், மத்திய மகாராஷ்டிராவிற்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிராவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும், கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிராவின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : Widespread heavy rain warning in place in various states of India today.

Share via