தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி-தொண்டர்கள் உற்சாகம்.

by Editor / 05-06-2024 10:43:51am
தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி-தொண்டர்கள் உற்சாகம்.

தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை பெற்று தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது.கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58% வாக்குகளைப் பெற்றிருந்தது.12 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில் அதனை பெற்றது நாம் தமிழர்.பாமகவை விட தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி இரண்டு மடங்கு அதிக வாக்கு சதவீதத்தை தேர்தலில் பெற்றுள்ளது.நாம் தமிழர் கட்சி 8.22% பெற்றுள்ளது.அவர்கள் வழக்கமாக வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு ஒலிவாங்கி சின்னம் புதிதாக கொடுக்கப்பட்டு அதுவும் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டு அதை வைத்து குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.வாக்கு வங்கி உயர்ந்து மாநில அந்தஸ்து பெறும் கட்சி என்ற நிலைக்கு நாம் தமிழர் கட்சி உயர்ந்துள்ளதால், கட்சி தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

 

Tags : தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி-தொண்டர்கள் உற்சாகம்.

Share via